Tamil Torrents
Sunday, April 21, 2013
பார்வையற்றோருக்கு உதவும் விதத்தில், பிரைய்லி முறையைப் பயன்படுத்தி, ஒரு ஸ்மார்ட்போன், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், புதிய கண்டுபிடிப்புகளுக்கென இயங்கிவரும் பல சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன. அதில்தான் சுமித் தாகரின் நிறுவனமும் நடந்துவருகின்றது.
தொழில்நுட்ப வடிவமைப்புப் படிப்பில் முதுநிலைப்பட்டம் பெற்றுள்ள தாகர், டெல்லி தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் இந்தப் புதிய போனை வடிவமைத்துள்ளார். தற்போது சோதனை முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த போன், வெற்றி பெற்றால், பார்வையற்றோருக்கு இது பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று தாகர் குறிப்பிட்டார்.
மூன்று வருடங்களுக்கு முன்னால், இந்த முயற்சியைத் துவக்கிய தாபரின் நிறுவனமான கிரியேட் டிசைன் சொல்யுஷனில், ஆறு பேர் பணிபுரிகின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து, ஐந்து இளம் திறமையாளர்களை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுத்து அவர்களின் தொழில்முறை கண்டுபிடிப்புகளுக்கு நிதி உதவி அளிக்கும் ரோலெக்ஸ் அவார்ட்ஸ் நிறுவனம், இவர்களுக்கு உதவி புரிவது குறிப்பிடத்தக்கது.

Monday, April 15, 2013
சிங்கம் – 3 ம் பாகமும் எடுக்க வேண்டியதிருக்கும்! – இயக்குநர் ஹரி தகவல்!+ ஸ்பெஷல் ஆல்பம்!
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘சிங்கம் 2 ’ படம் பரபரப்பாக வளர்ந்து வருகிறது.
‘சிங்கம் 2’ படத்தைப் பற்றி இயக்குனர் ஹரி,”“தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் அதே கதையின் தொடர்ச்சியாக வருவது இந்தப் படமாகவே இருக்கும். பிரகாஷ்ராஜ் முதல் பாகத்தில் இறந்து விடுவதால் இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை.கூடுதலாக சந்தானம் இணைந்திருக்கிறார்.
முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகம் பற்றிய அவுட்லைன் மனதில் இருந்தது. ‘வேட்டை தொடரும்’ என்று பார்த்த பின்னர் பலருக்கும் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டது. பார்க்கிறவர்கள் எல்லோரும் அதையே கேட்டார்கள். அதுவே ஊக்கம் தந்தது, இரண்டாம் பாகம் எடுக்க முடிவெடுத்து விட்டேன்.

வழக்கம் போல் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், நாசர், விவேக், மனோரமா, ராதாரவிமுகேஷ் ரிஷி, விஜயகுமார் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
தூத்துகுடியில் ஆரம்பித்து தென்னாப்பிரிக்காவில் முடியும் கதை.இந்த படத்தின் கிளைமாக்ஸ் வெளிநாட்டில்தான் நடக்கிறது. படத்தில் தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா போலீஸ் வருகிறார்கள். இந்தியன் போலீஸ் என்றால் எப்படிப்பட்டது என்பது படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது,இதுவும் ஹிட் ஆகி சிங்கம் 3 -ம் பாகமும் எடுக்க வேண்டியதிருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் இயக்குனர் ஹரி.

வழக்கம் போல் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், நாசர், விவேக், மனோரமா, ராதாரவிமுகேஷ் ரிஷி, விஜயகுமார் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
Friday, April 12, 2013
இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?
நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்றுhttp:// www.wintechmobiles.com/ tools/ huawei-code-calculator/ , உங்களுடைய DONGLEஇன் IMEIகொடுத்து CALCULATE கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்
நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்றுhttp://
இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்
Wednesday, April 10, 2013
விண்டோஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களில் பூBட்டிங் திரையை மாற்ற..
விண்டோஸ் இயங்குதளம் தொடங்கும் போதும் மூடும் போதும் இருப்பியல்பான பூட்டிங் திரையே தோன்றும். இதனை மாற்றம் செய்ய இயங்குதளத்தில் எந்தவொரு வசதியும் இல்லை.
விண்டோஸ் இருப்பியல்பு திரையை மாற்றி நம்முடைய படத்தையோ அல்லது நமக்கு பிடித்தமான படத்தையோ பூட்டிங் திரையில் வைத்து பார்க்க ஆசை இருக்கும். நமக்கு பிடித்தமான படத்தை பூட்டிங் திரையாக வைக்க இரண்டு வழி உண்டு ஒன்று இயங்குதளத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து வைக்க வேண்டும். மற்றொன்று மூன்றாம் தர மென்பொருளின் உதவியுடன் வைக்கலாம்.
இயங்குதளம் மூலமாக பூட்டிங் திரையை மாற்றுதல்
முதலில் வின்கி மற்றும் R பொத்தான்களை ஒரு சேர அழுத்தி தோன்றும் விண்டோவில் regedit என்று உள்ளிட்டு ஒகே செய்யவும். தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி தேர்வு செய்யவும்.
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Authentication\LogonUI\Background

பின் Background என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் வலது புறம் OEMBackground என்பதை டபுள் கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் Value data என்பதில் 1 என்று உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தி ரிஸிஸ்டரி எடிட்டரை மூடி அடுத்து C:\Windows\System32\oobe எனும் வரிசையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்யவும். நீங்கள் இயங்குதளத்தை எந்த ட்ரைவில் நிறுவியுள்ளீர்களோ அந்த ட்ரைவில் ஒப்பன் செய்யவும். இங்கு C:
ட்ரைவில் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.

அடுத்து oobe எனும் கோப்பறையினுள் info எனும் கோப்பறையையும் அதனுள் backgrounds எனும் கோப்பறையையும் உருவாக்கவும்.விடவும்.அதனுள் நீங்கள் பூட்டிங் திரையில் வைக்க விரும்பிய படத்தை காப்பி செய்யவும். அந்த படத்திற்கு backgroundDefault.jpg என்று பெயரை மாற்றிக்கொள்ளவும். அந்த படமானது .jpg இருக்கும் பட்சத்தில் 256 கே.பி அளவுக்குள் இருத்தல் அவசியம் ஆகும். ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து பாருங்கள் நீங்கள் குறிப்பிட்ட படம் பூட்டிங் திரையாக வந்திருக்கும்.
மென்பொருள் மூலம் பூட்டிங் திரையை மாற்ற
மேலே குறிப்பிட்ட முறையை செய்ய நேரம் போதவில்லை என்போருக்கு எளிதாக இலவச மென்பொருள் உதவியுடன் பூட்டிங் திரையை மாற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி

மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் VSLogonScreenCustomizer அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
அதில் Open Picture File என்னும் பொத்தானை அழுத்தி படத்தினை தேர்வு செய்யவும். பின் Apply எனும் பொத்தானை அழுத்தவும். User image has been set on logon screen successfully என்ற செய்தி வரும்.
தற்போது கணினியை மறுதொடக்கம் செய்து பாருங்கள், நீங்கள் குறிப்பிட்ட படம் பூட்டிங் திரையாக அமர்ந்திருக்கும்.
மூன்றாம் தர மென்பொருளை பயன்படுத்தி எளிதாக பூட்டிங் திரையை மாற்றிக் கொள்ள முடியும். இது விண்டோஸ் விஸ்டாவிற்கும் பொருந்தும்.
Tuesday, April 9, 2013
”மரியான் படத்தை அப்படியே தலைகீழாக படமாக்கியுள்ளோம். அதாவது, கிளைமாக்ஸ் காட்சியை முதன்முதலாகவும், முதல் காட்சியை கடைசியிலும் படமெடுத்துள்ளோம். எனவே, கிளைமாக்ஸ் காட்சியில் கொடுக்கவேண்டிய உணர்ச்சிகளை முதலிலேயே கொடுக்கவேண்டும். இதற்காக தனுஷ் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.” என்று இயக்குனர் பரத்பாலா தெரிவித்தார்.
இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்,”மரியான் என்பவன் ஒரு மீனவன். அவன் சாதாரண மீனவன் போல படகில் போய் மீன் பிடித்து வருபவன் அல்ல. ஒரே மூச்சில் 50 அடி ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பவன். அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதற்கு அவருக்கு நீச்சலும் தெரியாது, நீருக்குள் மூச்சு பிடித்து மூழ்குவதும் முடியாது. எனவே, வெளிநாட்டில் இருந்து இதற்காக சிறப்பு பயிற்சி கொடுப்பவர்களை வரவழைத்து, அவர்களிடம் தனுஷ் கற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்தார். 50 அடி ஆழ்கடலில், ஆக்ஸிஜன்கூட இல்லாமல், உப்புத் தண்ணீரில் கண்ணாடிகூட போடாமல் மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார் தனுஷ்.
2 வருடத்திற்கு முன்பு தேசிய விருது தேர்வாளாராக பணியாற்றி வந்தேன். அப்போது தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தை பார்த்தேன். அதில் தனுஷ் அந்த கதாபாத்திரத்திற்காக கொடுத்த உண்மையான நடிப்பை பார்த்து வியந்தேன். ஆனால், அதற்கு முன்பே ‘மரியான்’ படத்தின் கதையை எழுதிவிட்டேன். தனுஷ்-க்கு இந்த கதை ரொம்பவும் பிடித்துவிட்டது. எனவே இதில் நடிக்க ஒப்புக் கொண்டார். அடுத்த 6 மாதங்களுக்குள்ளாகவே படத்தை எடுக்கத் துவங்கி விட்டோம்.
இந்த படத்துல லொகேஷன்ஸ் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். பாதி படம் கன்னியாகுமரி பக்கத்தில் நீரோடி என்ற கிராமத்திலும் மீதிப்படத்தை ஆப்பிரிக்காவில் சூடானிலும் படமாக்கியுள்ளோம். ஆப்பிரிக்கா பாலைவனம், அந்தமான் ஆழ்கடல் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். ஆப்பிரிக்காவில் படப்பிடிப்பு நடக்கும்போது அங்குள்ள சூழ்நிலை சரியில்லாததால் நமீபியாவில் படப்பிடிப்பை நடத்தினோம்.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஏற்கெனவே நண்பர்கள். இந்த படத்தில் காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சி என 5 விதமான எமோஷன்ஸ் இருக்கும். அந்த 5 உணர்வுகளையும் உள்வாங்கித்தான் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் திரைக்கதையோடு ஒட்டியே ஒவ்வொரு பாடலும் பயணிக்கும். வாலி 2 பாடல்களும், கபிலன், தனுஷ், குட்டி ரேவதி ஆகியோர் தலா 1 பாடலும் எழுதியுள்ளனர்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் மார்க் கோனிக்ஸ் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். இவர் ஒளிப்பதிவு செய்த ‘ஜான் மேட் டாக்’ என்ற பிரெஞ்ச் படத்தை பார்த்தபோது, அந்த படத்தில் இருந்த காட்சியமைப்புகள் இந்த படத்திற்கும் தேவைப்பட்டது. எனவே, அவரை தொடர்புகொண்டு சென்னைக்கு வரவழைத்தேன். அவருக்கு முழுக் கதையையும் விளக்கினேன். அவரும் ஒப்புக்கொண்டார். அவருடைய ஒளிப்பதிவில் இப்படத்தின் காட்சியமைப்புகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
படத்தை அப்படியே தலைகீழாக படமாக்கியுள்ளோம். அதாவது, கிளைமாக்ஸ் காட்சியை முதன்முதலாகவும், முதல் காட்சியை கடைசியிலும் படமெடுத்துள்ளோம். எனவே, கிளைமாக்ஸ் காட்சியில் கொடுக்கவேண்டிய உணர்ச்சிகளை முதலிலேயே கொடுக்கவேண்டும். இதற்காக தனுஷ் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் பணிகளை முடித்து இந்த மாதம் இசையை வெளியிடவிருக்கிறோம். மே மாத முதல் வாரத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம்.”என்று அவர்
Monday, April 8, 2013
'காசேதான் கடவுளடா' ரீமேக்கில் வடிவேலு!
1972 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற் காமெடி படம் 'காசேதான் கடவுளடா'. இதில் முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இப்படத்தில் வரும் 'காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா' என்ற பாடல் இப்போது வரை பிரபலமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில், சிறிய நடிகர்கள் நடித்து பெரும் வசூலை வாரி குவித்த படம் இது.
இப்படத்தினை மீண்டும் தமிழில் உருவாக்க இருக்கிறார்கள். 'ஒன்பதுல குரு' படத்தினை இயக்கிய PRO செல்வக்குமார் இந்த ரீமேக்கை இயக்க இருக்கிறார். கிரேஸி மோகன் வசனம் எழுத இருக்கிறார்.
ரீமேக் குறித்து செல்வக்குமார் "தேங்காய் சீனிவாசன் வேடத்திற்கு எனக்கு வடிவேலுவை விட்டால் வேறு யாரையும் நினைக்க முடியவில்லை. அவரிடம் பேசி இருக்கிறேன். அவரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
முத்துராமன், ஸ்ரீகாந்த் இருவரது வேடங்களுக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரிடம் பேசி இருக்கிறேன். மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கப்படும். விரைவில் அதிகாரப்பூர்வமாக யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கிறேன் " என்றார்.
Subscribe to:
Comments (Atom)