Friday, March 29, 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைவிமர்சனம்

                               
வணக்கம் நண்பர்களே,
“பசங்க” பாண்டிராஜ் மெரீனாவுக்கு பிறகு இயக்கியிருக்கும் “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்துக்குபோயி வாடி வதங்கி வந்த கதையா சொல்லுறேன் கேட்டுக்குங்க. பசங்க படத்த பாத்துபுட்டு அடடா தமிழ் சினிமாவுலையும் இப்பிடி எல்லாம் படம் எடுக்க ஆளிருக்கான்னு சந்தோஷப்பட்டேன். அப்புறமா மெரீனா படத்த பாத்துபுட்டு கதை பெரிசா இல்லாங்காட்டி போனா என்ன! நல்ல கருத்து சொல்லி இருக்கறேன்னு ஆறுதல் பட்டேன். ஆனா “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தில கடைசி வரைக்கும் கதைய தேடியே ரயட் ஆகிபுட்டான்........


காமிடி படம்ன்னு சொன்னாலே தாஸ்மார்க்ல தண்ணி அடிச்சுக்கிட்டு வேலவெட்டி எதுக்கும் போகாம தண்ட சோறுதிங்கிற நம்ம மாதிரி பசங்கள காட்டுறதே இந்த டைரக்டர் பசங்களுக்கு வேலையா போயிடிச்சு. நானும் பாத்துகின்னே வாறேன் காமிடி படமுன்னு சொன்னாலே கதை இருக்க கூடாதுன்னு ஏதாச்சும் புதுசா சட்டம் கொண்டு வந்திருக்காங்களோ தெரியல. கதைன்னு சொல்லுறது மருந்துக்கு கூட இல்லை. 


அடுத்து திரைக்கதை, திரைக்கதைய எழுதி முடிச்சுபுட்டு வெறிநாய்கிட்ட குடுத்து குதறி எடுத்தப்புறம் படம் எடுத்திருக்கார் போல படம் புல்லா அங்கயும் இங்கயுமா திரைக்கதை சிதறி போயி இருக்கு (எடிட்டரின் பாடு பரிதாபம்). அந்த டிரெயில்வே ஸ்டேஷன் லோக்கேசனுக்கு போனாலே ஆளாளுக்கு பிளாஷ்பாக் சொல்லி கழுத்த அறுக்கிறாங்க. பாண்டியராஜ் படங்களில் ஏதாவது மெசேஜ் இருக்கணும் எங்கிறத்துக்காக வைக்கப்பட கடைசி பத்து நிமிடக் காட்சிகள் “செப்பா இப்பவே கண்ண கட்டுதே” ராகம்.

என்ன ஆச்சு யுவன் உங்களுக்கு போஸ்டர்ல மட்டும் தான் உங்க பேர். படத்துக்கு நீங்க மியூசிக் பண்ணினதுக்கு சின்ன அடையாளம் கூட இல்லை. ஒளிப்பதிவு சிறப்பு. வசனங்கள் பல இடங்களில் சிரிக்க வைத்தாலும் ஏற்கனவே எங்கேயோ கேட்ட குரல்.

விமல், சிவகார்திகேயன், சூரி இரண்டு கத நாயகிகள் மற்றும் சக நடிகர்கள் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். படம் முழுவதும் இடைவிடாமல் சிரிப்பதற்கு மினிமம் கரண்டி. மகிழ்ச்சியான முடிவு! வெய்யில் நேரத்தில் ஜில்லுன்னு மோர் குடிக்கும் சுகம்.(பசியோட போறவங்களுக்கு போதாது பாண்டிராஜ் சார்) நண்பர்கள் , குடும்பத்தோடு சேர்ந்து சிரித்துவிட்டு மட்டும் வரக்கூடிய படம் . மொத்தத்தில் கேடி பில்லா கில்லாடி ரங்கா – விஜய் டீவீக்கு வெளியே ஒரு “கலக்க போவது யாரு” பைனல்ஸ்.
(பரதேசி காய்ச்சல் இன்னும் போகலப்பா!! அதனால தான் என்னமோ என் விமர்சனம் இப்பிடி இருக்கோ தெரியல)